search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல் அரசியல்"

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்த்துவிட்டு, தேர்தல் அரசியலை பா.ஜ.க கையில் எடுத்துள்ளதாக சிவசேனா சாடியுள்ளது. #ShivsenaslamsBJP
    மும்பை:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயக கட்சியுடன் பா.ஜ.க அமைத்து இருந்த கூட்டணியை சமீபத்தில் முறித்துவிட்டு ஆட்சியை கவிழ்த்தது. இதன்மூலம் தற்போது ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், சமீபத்தில் பா.ஜ.க தலைவர் அமித் ஷா ஜம்மு காஷ்மீர் சென்று தொண்டர்களிடையே உரை நிகழ்த்தினார்.

    இதுதொடர்பாக பேசிய சிவசேனா, 2014-ல் மக்கள் ஜனநாயக கட்சியுடன் பா.ஜ.க தான் தாமாக முன்வந்து கூட்டணி அமைத்ததாகவும், இப்போது அந்த முகமூடியை கலைத்துவிட்டு, தேர்தல் அரசியலில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.



    பா.ஜ.க.வின் இதுபோன்ற சதிவேலைகளால் மக்கள் சோர்ந்து விட்டதாகவும், உண்மையை பேச யாராவது பா.ஜ.க.வுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் சிவசேனா சாடியுள்ளது.

    ‘ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வளர்ச்சிகள் இல்லை என்றும் பயங்கரவாதம் அதிகரித்து விட்டதாகவும் கூறும் பா.ஜ.க தலைவர் அமித் ஷா, 3 ஆண்டுகள் கூட்டணியில் இருந்தபோது ஏன் கேள்வி எழுப்பவில்லை? 3 ஆண்டுகள் கூட்டணியில் இருந்தபோது எந்தப் பிரச்சினைகளுக்கும் பொறுப்பேற்காமல், மகிழ்ச்சியாக இருந்துவிட்டு, தற்போது கூட்டணியை முறித்தபின் குற்றம் சாட்டுகிறது’ என்றும் சிவசேனா தெரிவித்துள்ளது. #ShivsenaslamsBJP
    ×